ஜோதிட வகுப்புகள்

திரு. அபிராமி சேகர் அவர்களின் குருநாதர் திரு.P.S.ஐயர் மறைவுக்குப் பின் அவரது பெயரில் ஒரு அமைப்பை நிறுவி அதில் வாராவாரம் சனிக்கிழமை இலவசமாக ஜோதிடத்தை சுமார் 19 ஆண்டுகளாக பயிற்றுவித்தார். இவரிடத்தில் பல மாணவர்கள் ஜோதிடத்தை முறையாகப் பயின்று இன்று பெயர், புகழ், வருமானம், ஈட்டி வருகிறார்கள்.
   
தற்பொழுது “ஸ்ரீ அகத்தியர் ஜோதிடப் பயிற்சி மையம்” என்ற ஒன்றை நிறுவி அதன் “செயலாளராகவும்” இருந்து இலவச ஜோதிட சேவை ஆற்றி வருகிறார். இவர் பல ஜோதிட சங்கங்களில் வகுப்புகள் எடுத்து வருவதுடன் மட்டுமல்லாமல் பல ஜோதிட மாநாடுகளில் கலந்து கொண்டு சொற்பொழிவு  ஆற்றியும் கோயில்களில் விழாக்காலங்களில் ஜோதிடப்பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வருகிறார். மேலும் பல ஜோதிட மாநாடுகளில் கலந்து கொண்டு பட்டங்களையும், பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

ஜோதிடம் என்பது மிகவும் தெய்வீகமானது, அதனால் மற்ற கலைகளை விட இக்கலை மிகவும் புனிதமானது. ஆதலால் இக்கலையை கற்க ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். எம்மிடம் படித்த மாணாக்கர் பலர் தமிழகத்தில் பல பகுதிகளிலும் இத்துறையில் சிறப்பாக சேவை செய்து வருகிறார்கள்.
           
           எங்களது ஜோதிட பயிற்சியில் நடத்தப்படும் பயிற்சிகள் பற்றிய விவரம்:   
       
அடிப்படை ஜோதிடம்          
 பலன்கள் சொல்லும் முறை           
வாஸ்து           
நியுமராலஜி           
பிரசன்னம்

ஆர்வம் உள்ள எவரும் எமது பயிற்சி மையத்தில் சேர்ந்து பலன் பெறலாம்.

No comments:

Post a Comment