ஜோதிடர் பற்றி




ஜோதிடரைப் பற்றி

ஸ்ரீ சொக்கநாதர் உடனுறை அங்யற்கன்னி மீனாட்சி ஆட்சி செய்யும் கோவில் மாநகரமாம் மதுரையம்பதில் வீர சைவ இனத்தில் பிறந்தார். பாரம்பரியம்மான ஆசாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் இளம் வயதிலேயே இசை, சமயம், ஆன்மிகம், மாந்திரீகம், வைத்யம் இவற்றைப் படிப்பதிலும் கற்பதிலும் ஆர்வமும் முயற்சியும் உடையவராக இருந்தார். பள்ளிப் படிப்பை முடித்த இவர் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின் ஜோதிடவியலில் முதுகலைப் பட்டம் சாஸ்ரா பல்கலைக் கழகத்தில் படித்துப் பெற்றார்.

      இளவயதிலேயே ஆன்மீக ஈடுபாடும் சித்தர் வழிபாடும் சித்தமார்க்கத்தில் பெரும் ஈடுபாட்டுடன் விளங்கினார். அத்துடன் சித்யவைத்தியத்தில் ஈடுபட்டு பாரம்பரியமிக்க மதுரை சித்ய வைத்ய சங்கத்தில் பதிவு பெற்று சித்தவைத்தியத்துடான ன்னுடைய அறிவையும் ஆராய்ச்சியையும் மேம்படுத்தினார். சித்த வைத்தியத்தில் டாகடர் பட்டம் பெற்றார். இக்காலங்களில் ஹோமியோபதி மருத்துவ முறையையும் முறைப்படி முழுமையாகக் கற்று அதிலும் பதிவு பெற்ற சங்கத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

      இந்நிலையில் இந்தியாவின் புகழ்பெற்ற ஜோதிட மாமேதையான ஜோதிட பீஷ்மர் திரு.P.S.ஐயர் அவர்களின் மாணவராக சேர்ந்து அவரிடம் முறையாக ஜோதிடத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார். அவரிடம் ஜோதிடம் பயிலும் பொழுது ஜோதிடத்தின் அனைத்துப் பிரிவுகளையும் முறையாக நன்கு கற்றுத் தேர்ந்தார். அத்துடன் வாணியல் (ASTRONAMY) கணிதம் (MATHS) வேத ஜோதிடம் (VEDIC ASTROLOGY) இந்திய ஜோதிடம் (INDIAN ASTROLOGY) மேற்கத்திய ஜோதிடம் (WESTERN ASTROLOGY) நாட்டினுடைய ஜாதகம் (MUNTANE ASTROLOGY) மற்றும் ப்ரஸனம் குறிப்பாக கேரளப் ப்ரஸனம், கைரேகை (PALMISTRY) வாஸ்த்து இவற்றை நன்கு கற்றதுமட்டுமில்லாமல் எண்கணிதம் (NUMEROLOGY) டாரட் (TARAT) ரத்னக் கற்கள் பரிந்துரைத்தல் போன்றவற்றிலும் நிபுணத்துவம் பெற்றார். மேலும் நாடி ஜோதிடம் (NADI ASTROLOGY) மூலமாகப் பலன் உரைப்பதிலும் மிகவும் நிபுணத்துவமும் பாண்டியத்துவமும் பெற்றார்.

      இவரது குருநாதர் திரு.P.S.ஐயர் மறைவுக்குப் பின் அவரது பெயரில் ஒரு அமைப்பை நிறுவி அதில் வாராவாரம் சனிக்கிழமை இலவசமாக ஜோதிடத்தை சுமார் 19 ஆண்டுகளாக பயிற்றுவித்தார். இவரிடத்தில் பல மாணவர்கள் ஜோதிடத்தை முறையாகப் பயின்று இன்று பெயர், புகழ், வருமானம், ஈட்டி வருகிறார்கள்.
     
      தற்பொழுது ஸ்ரீ அகத்தியர் ஜோதிடப் பயிற்சி மையம் என்ற ஒன்றை நிறுவி அதன் “செயலாளராகவும்” இருந்து இலவச ஜோதிட சேவை ஆற்றி வருகிறார். இவர் பல ஜோதிட சங்கங்களில் வகுப்புகள் எடுத்து வருவதுடன் மட்டுமல்லாமல் பல ஜோதிட மாநாடுகளில் கலந்து கொண்டு சொற்பொழிவு  ஆற்றியும் கோயில்களில் விழாக்காலங்களில் ஜோதிடப்பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வருகிறார். மேலும் பல ஜோதிட மாநாடுகளில் கலந்து கொண்டு பட்டங்களையும், பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

      இத்துடன் பல ஜோதிடப் பத்திரிக்கைகளில் இவர் கட்டுரைகள் எழுதியும் ஜோதிட மாத இதழான “குருவருள் ஜோதிடம்” என்ற பத்திரிக்கையில் கேள்வி பதில் பகுதியும் மக்களின் கேள்விகளுக்கு தொடர்ச்சியாகப் பதில் எழுதி வருகிறார். இத்துடன் ஆன்மீக ஆலயம் என்ற ஜோதிட மாத இதழில் ஜோதிடக் கேள்வி பதில் எழுதி வருகிறார். மேலும் திருவருள் சக்தி என்ற ஆன்மீக ஜோதிட இதழின் இணை ஆசிரியராகவும் இருந்து வருகிறார். மேலும் எவர் சிறந்த ஜோதிடராக விளங்க முடியும் என்பதைப் பற்றியே ஒரு புத்தகம் எவர் ஜோதிடராகலாம" என்று எழுதியுள்ளார்.

      மதுரையில் அபிராமி ஜோதிட நிலையம் என்ற பெயரில் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஜோதிடம் பார்த்து வருகிறார். அதே பெயரில் சென்னையிலும் ஒரு கிளை அலுவலகத்தை அமைத்து ஜோதிடப்பணியாற்றி வருகிறார். மேலும் சென்னையிலும் ஜோதிடர்களுக்கென்று அவ்வப்பொழுது சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரிடம் பலதுறைகளிலும் புகழ்பெற்றவர்கள் ஜாதகம் பார்த்து தங்கள் வாழ்க்கையை வளமுள்ளதாக்கிக் கொண்டுள்ளார்கள்.

      இவர் ஜோதிடத்தை ஆராய்ச்சி மனப்பான்மையுடன் ஆராய்ந்து பலன் கூறுவதில் கைதேர்ந்தவராவர். இத்துடன் உள்ளது உள்ளபடி உரைக்கும் வல்லவராவர், மூன்று காலங்களின் பலன்களை உரைத்து அதற்குரிய வழிமுறைகளையும் உரைப்பதில் இவர் இவரது குருநாதர் வழிமுறையை இன்றளவும் பின்பற்றுகிறார். மேலும் நவீன விஞ்ஞான உலகத்திற்கேற்ப மாறி வரும் காலச்சூழ்நிலைகளுக்கேற்ப பலன் உரைப்பதில் வல்லவராவார். இவரது வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதும் பரவி விரிந்து உள்ளார்கள்.

      மேலும் ராசி, பலன் உரைப்பதில் எல்லோரும் ராசியை வைத்து பலன் எழுதி சொல்லி வரும் காலங்களில் இவர் அவரவர் பிறந்த லக்னத்தின் அடிப்படையிலேயே பலன்கள் நடைபெறும் என்று “குருப்பெயர்ச்சி” “சனிப்பெயர்ச்சி” “ராகு கேது பெயர்ச்சி” பலன்களைக் கூறுவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

      இவர் அடிக்கடி கூறும் வார்த்தை தெய்வ அனுகூலம் என்ற வார்த்தை ஆகும். இந்த தெய்வ அனுகூலம் என்ற வார்த்தையின் மறுபெயரே அதிர்ஷ்டம் என்பதாகும்.  இந்த அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கு தெய்வ அனுககூலம் என்பதே சிறந்த வார்த்தையாகும். இந்த தெய்வ அனுகூலம் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய ஜாதகத்தில் எப்படி உள்ளது அதை அடைய என்ன வழி என்பதை எல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைப்பதில் வல்லவரவார்.

      இவர் பல ஜோதிட மாநாடுகளில் கலந்து கொண்டு பல பட்டங்கள், விருதுகள், நினைவுபபரிசுகள் பெற்றாலும் ஜோதிட இமயம் என்ற பட்டமே இவருக்கு நிலைத்து நிற்கிறது. அதற்குத்தக்கபடி இவர் இமயம் போல் ஜோதிடபலன்களை ஆராய்ச்சி மனப்பான்மையோடு பலன் உரைப்பதில் கை தேர்ந்தவராவார்.

      இவர் நல்ல ஜோதிடர் மற்றும் அல்ல. நல்ல ஆன்மீகவாதியும் இறைபக்தியும் உடையவர். அபிராமி அம்பாளின் பரமபக்தனாகி அவள் பெயரால் அவள் அனுக்கிரகத்தால் அவள் ஊட்டிய ஞானத்தால் இவர் ஜோதிடப் பலன் உரைப்பதால் அபிராமி சேகர் என்றும் அபிராமி என்றும் எல்லோராலும் அழைக்கப்படுவராகி விட்டார்.

      இவரது ஜோதிட ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஜோதிடக் கேள்வி-பதில்கள் ராசிபலன்கள், ஆன்மீகம் மற்றும் கோவில் ஸ்தலங்கள், பரிகாரம் மற்றும் பரிகார ஸ்தலங்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இந்த இணைய தளத்தில் வர இருக்கிறது. அதை அனைவரும் படித்துப் பயனடைந்து அதன் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

      மனிதனது வாழ்க்கை விசித்திரமானது, வித்தியாசமானது. ஒருவரது வாழ்க்கை போல் மற்றொருவர் வாழ்க்கை இல்லை. ஒவ்வொருவர் வாழ்விலும் என்ன மாதிரியான பிரச்சினைகள் அல்லது கேள்விகள் எழும் என்பதைப்பற்றி கேள்விகள் என்ற தலைப்பில் இவர் எழுப்பியுள்ள கேள்விகளே இதற்குச் சான்றாகும். இக்கேள்விகளுக்கெல்லாம் இவரிடம் விடைகாண இந்த இணையதளம் மூலமாக நேரிலோ, தொலைபேசி மூலமோ, இ-மெயில் மூலமோ தொடர்பு கொண்டு பலன்களைப் பெற்று ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாகவும், வளமானதாகவும் பெற்று வாழ எல்லாம் வல்ல பரம்பொருள் துணைபுரியட்டும்.

No comments:

Post a Comment