Sunday 12 April 2015

உதாரண ஜாதகங்களுடன் ஜோதிட கேள்வி பதில்கள் 01

ஜாதகம் - 1
பெயர் : V.சுரேஷ்ராஜன், S/o.வள்ளிநாயகம்,
பிறந்த தேதி : 19-07-1961,
பிறந்த நேரம் இரவு மணி 7.05,
பிறந்த இடம் : மானாமதுரை,
சந்திர தசை இருப்பு 04-05-26



கேள்வி
எனது ஆசிரியர் பணியை ஒழுங்காக நிறைவு செய்வேனா? எனது உடலில் உள்ள நோய் தன்மை குறையுமா? சுய தொழில் செய்யலாமா? குழந்தைகளால் நன்மையுண்டா? மனைவியின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?


பதில்
மகர லக்னம் கன்னி ராசி அஸ்த்த நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு தற்பொழுது சனி திசையில் சுக்ர புத்தி 03.01.2017 வரை நடப்பில் உள்ளது. சனி உங்கள் லக்னத்திற்கு 1,2ம் வீட்டிற்கு அதிபதியாகி அவர் லக்னத்தில் அமர்ந்து அவர் 8க்குடைய சூரியன் சாரம் பெற்று அச்சூரியன் 7ல் அமர்வது சிறப்பானதல்ல. 8ம் இடம் உடல் ஆரோக்ய குறைவையும் 7ம் இடம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவையும் காட்டும். மேலும் வேலையில் சற்று கவனம் தேவை. சுக்ரன் உங்கள் லக்னத்திற்கு 5.10க்குடைவராகி அவர் 5ல் அமர்ந்து 7க்குடைய சந்திரன் சாரம் பெற்று அந்தச் சந்திரன் 9ல் அமர்வது பணியை விட்டு வெளியே வருவது போல் தோன்றினாலும் பணியை விடமாட்டீர்கள்.

5ம் இடம் என்பது வேலையை விட்டு வெளியே வருவதைக் காட்டினாலும் 9ம் இடம் என்பது பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியரைக் குறிப்பிடும். நீங்கள் ஆசிரியராக இருப்பதால் ஒழுங்காய் பணி நிறைவு அடைய வாய்ப்புகள் உண்டு. 5,9 பாவங்கள் தொடர்பு கொள்வதால் உடலில் நோய் ஏற்பட்டாலும் உடனே அது குணமாகும். மேலும் திசை 8,7 பாவங்களைக் காட்டுவதால் ஆப்ரேஷன் செய்ய வாய்ப்புகள் அதிகமாகும், 8ம் இடம் என்பது ஆப்ரேஷனைக் குறிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் அமையும். அவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும், மனைவியின் உடல்நலத்தைப் பொறுத்தவரைப் பெரிய அளவில் நோய்த் தாக்கம் இல்லை. எனவே கவலைப்பட வேண்டாம்.

No comments:

Post a Comment