Saturday, 11 April 2015

ஜோதிடம் ஒரு அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம் 


ஈரேழு லோகங்களுக்கும் முழுமுதற் கடவுளாம் சகல காரியங்களையும் தடையின்றி நிறைவேற்றும் எல்லாம்வல்ல எம்பெருமான் “ஸ்ரீவிநாயாகப்” பெருமானை” வணங்குகிறேன். ஆக்கல், காத்தல், அழித்தல், என முத்தொழில்களையும் புரியும் ஸ்ரீபிரம்மா ஸ்ரீவிஷ்ணு ஸ்ரீசிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் வணங்குகிறேன். சகலகலைகளுக்கும் அதிபதியாம் வெண்தாமரையில் வீற்றிருக்கும் வாக்குவாணியாம் “ஸ்ரீகலைவாணியை” வணங்குகிறேன். நம்முடைய தலைவிதியை மாற்றி நம்மை எல்லாம் நல்வழிப்படுத்தும் நவக்கிரகங்களையும் அதன் துணைக் கிரகங்களையும் போற்றி வணங்குகிறேன். என் குல தெய்வமான “ஸ்ரீபைரவரையும்” நான் அன்றாடும் தொழுது வணங்கும் அன்னை “ஸ்ரீஅபிராமியையும்” அன்னை “ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரையும்” ஜோதிடத்தின் அதிபதியாம் தகப்பன் சுவாமியுமான ஞான மூர்த்தியான எம்பெருமான் “ஸ்ரீமுருகனையும்” உலக மக்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ வழிவகுக்கும் அன்னை “ஸ்ரீமஹாலஷ்மியையும்” மற்றும் தேவர்கள், தேவதைகள், தேவதூதர்கள், முனிவர்கள், ஞானிகள், ரிஷிகள், மகான்கள், சித்தர்கள், யோகிகள், சாதுக்கள், சந்நியாசிகள், மற்றும் பன்னிரு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், நால்வர் பெருமக்கள், இருபத்தியோரு சேனை அறுபத்தியோரு பந்தி தெய்வங்களையும் மற்றும் இறைத்தூதர்களையும் போற்றி வணங்குகிறேன். என் ஜோதிட ஆன்மீக மாந்தீரிக குருநாதர்களையும் என்னை இவ்வுலகில் ஈன்றெடுத்து அறிமுகப்படுத்திய என் தாய் தந்தையர்களையும் வணங்கி இந்த இணையதளத்தில் வருகைபுரியும் உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

இவ்வுலகில் எவ்வளவோ உயிரினங்கள் மற்றும் ஜீவராசிகள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மடிகின்றன. அவை எல்லாம் ஐந்து அறிவுக்குட்பட்ட ஜீவராசிகள் ஆகும். இத்துடன் மனித ஜீவனும் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மடிந்தாலும் மனித ஜீவனுக்கு மட்டுமே இறைவன் படைப்பில் ஆறறிவு உடையவனாகப் படைக்கப்பட்டுள்ளான். மற்ற உயிர்களுக்கெல்லாம் பேசும் திறனோ சிந்திக்கும் திறனோ இருந்தது இல்லை. ஆனால் மனித இனத்துக்கு மட்டுமே பேசும் திறனும் சிந்திக்கும் ஆற்றல் உடையவனாக இறைவன் படைத்துள்ளான். இறைவன் படைப்பில் இப்படிப்பட்ட மனிதனது வாழ்க்கையில் தான் மகிழ்ச்சி, இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம், உயர்வு, தாழ்வு, ஒற்றுமை, வேற்றுமை, போட்டி பொறாமைகள் இவையனைத்தும் அடங்கியுள்ளன. இவையெல்லாம் ஒரு தனிமனித வாழ்க்கையில் நடைபெறுவதற்கு என்ன காராணம் என்று பார்த்தோமானால் அவனது முன்ஜென்ம பாவபுண்ணிய கர்மபலன்களே காரணமாக அமையும்.

இந்து சாஸ்த்திரமே ஒரு தனிமனிதனின் “கர்மவினையைப்” பற்றியது ஆகும். அவரவர் போன ஜென்மத்தில் அல்லது முன் ஜென்மத்தில் செய்த பாவபுண்ணியங்கள் அடிப்படையிலேயே இச்ஜென்மத்தில் அவரவது வாழ்க்கை அமையும் என்று கூறுகிறது. ஜோதிட சாஸ்த்திரமும் அதையேதான் வலியுறுத்துகிறது. இந்த ஜோதிட சாஸ்த்திரம் மூலம் ஒரு மனிதனின் முன் ஜென்மம் இச்ஜென்மம் மற்றும் வரும் ஜென்மங்களின் முக்காலப் பலன்களையும் அறிந்து கொள்ள முடியும், அதன் அடிப்படையில் ஒருவன் தன் வாழ்க்கையை அறிந்து வளமுள்ளதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றிக் கொள்ள முடியும்.

இவ்வுலகில் ஒரு மனிதன் பிறந்து வளந்து வாழ்ந்து வரும் காலங்களில் அவனுக்குத்தான் எவ்வளவோ பிரச்சினைகள் போராட்டங்கள் ஏற்பட்டு விடுகின்றன. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் வாழ்ந்துவரும் காலங்களில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த உலகமே சுழன்று கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பூமி பந்தும் சுற்றி சுழன்று கொண்டு இருக்கிறது. இப்பூமியில் வாழும் நாமும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். திரும்பிப் பார்க்க யாருக்கும் நேரமில்லை. நாம் திரும்பிப் பார்ப்பதற்குள் மற்றவர்கள் நம்மை முந்தி ஓடிவிடுவர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்படிப்பட்ட பிரச்சினைகளிருந்து எல்லாம் எப்படி மீண்டுவரலாம் எனபதை குறிப்பிடுவதே ஜோதிடம் ஆகும்.

ஒரு மனிதன் என்றால் முதலில் அவனது ஆயுள், நல்ல உடல் நலம், நல்ல கல்வி, நல்ல வேலை, நல்ல தொழில், திருப்தியான மகிழ்ச்சிகரமான மனவாழ்வு மற்றும் நல்ல குழந்தை பாக்யம், இத்துடன் சொந்தமாக வீடு, வண்டி வாகனங்கள், இவையெல்லாம் பொதுவான விஷயங்கள் ஆகும். இத்துடன் தாய், தந்தை மற்றும் சகோதர சகோதரிகள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என்று பலவித உறவுகளையும் சார்ந்தே அவனது வாழ்க்கை அமைந்துள்ளது. இவை பற்றி எல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் தெரிந்து கொள்ள உதவுவதே ஜோதிடம் ஆகும்.

முதலில் குறிப்பிட்டுள்ளது போல் மூன்று காலங்களையும் உணர்த்தக் கூடியது ஜோதிடம் ஆகும். கடந்த காலம் எனபது அவனது போன ஜென்மத்தில் அவன் செய்த பாவ புண்ணியங்கள் நல் தீவினைகள் அவனது பிறப்பு போன்றவற்றைக் குறிப்பிடும். இதிலிருந்து தீவினைகள் இருப்பின் அதிலிருந்து எப்படி விலகுவது விடுபடுவது என்பதை ஜோதிடம் தெளிவாகக் குறிப்பிடும். நிகழ்காலம் என்பது தற்பொழுது என்ன மாதிரியான தசாபுத்திகள் நடக்கிறது அதனால் ஏற்படும் நல்வினை தீவினை என்ன அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதைக் குறிப்பிடும். எதிர்காலம் எனபது எதிர்காலத்தில் என்ன நடக்கும் எப்படி நடக்கும் என்பது பற்றியும் அதிலிருந்து நாம் அடையும் நன்மை தீமைகளையும் மற்றும் கெடுபலன்கள் இருப்பின் அதிலிருந்து விடுபடவேண்டிய உபாயங்களையும் இச் ஜென்மத்திலும் மறு ஜென்மத்திலும் அடைய வேண்டிய நன்மைகளை ஜோதிடம் வலியுறுத்துகிறது.

இவ்வுலகில் “மாறாதது” என்று எதுவுமில்லை “மாற்றம்” என்ற ஒரு சொல் மட்டும் மாறாதது. ஜோதிடமும் இதற்கு விதிவிலக்கில்லை, மாறிவரும் காலதேச வர்த்த மானத்திற்குத்தக்கபடி நம் முன்னோர்கள், ஞானிகள், ரிஷிகள், யோகிகள் சொல்லிவிட்டுச் சென்றுள்ள ஜோதிடத்தை நாமும் மாற்றிப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

மாறிவரும் விஞ்ஞானத் தொழில்நுட்பம் தனிமனது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லக் காரணியாகிறது. அதற்கேற்ப ஜோதிடமும் விஞ்ஞானத்தின் துணை கொண்டு தனனை மாற்றி கால ஓட்டத்தில் மாறி வருகிறது. ஆகாயத்தில் உலவும் கிரகங்களின் நிலையறிந்து தனிமனிதனது வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை விஞ்ஞானப்பூர்வமாக அறிந்து கொள்வதே ஜோதிடம் ஆகும். பூமியில் ஏற்படும் கிரகங்களின் தாக்கத்தை வைத்து ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையிலும் ஏற்படும் விஷயங்களை விளக்கிக் குறிப்பிடுகிறது.

ஆயகலைகள் 64ல் ஜோதிடமும் ஒரு கலையாகும் எல்லாக்கலைகளும் ஏதாவது ஒரு காலத்தில் வளர்ந்து கொண்டு இருப்பதுபோல் ஜோதிடமும் தற்காலத்தில் காலதேச வர்த்தமானத்திற்கேற்ப வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஒரு மனிதன் பிறக்கும் பொழுது இப்பூமியில் அவனுக்கென்று ஜாதகக் கட்டம் செயல்படுகிறது. அப்பொழுது வானில் உள்ள கிரக நிலைகள் அக்கட்டத்தில் குறிக்கப்படுகின்றன. அதன்மேல் மற்ற கிரகங்கள் தற்காலத்தில் சுற்றிவரும் காலமே கோச்சாரம் ஆகும். இதனடிப்படையில் ஒருவருக்கு எப்பொழுது என்ன நிகழ்வுகள் நடக்கும் என்று கணிக்கப்படுகிறது அல்லது அனுமானிக்கப்படுகிறது. இதில் விஞ்ஞானத்தின் துணை கொண்டு கிரகங்களின் நிலையறிந்து துல்லியமாக பலன் உரைப்பதே ஜோதிடமாகும்.
இப்படிப்பட்ட ஒரு பல கலையான ஜோதிடத்தை ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எதிர்காலத்தை அறிந்து கொள்வதில் ஆர்வமும் முயற்சியும் மேற்கொண்டு அதனடிப்படையில் அமைத்து வெற்றி பெறுவதே விவேகமாகும்.

ஜோதிடப் பலன் அறிய பல முறைகள் உள்ளன, இருப்பினும் நம் நவீன விஞ்ஞான காலத்திற்கேற்ப நம் வாழ்வில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை கிரகங்களின் நட்சத்திர சார ஜோதிட அடிப்படையில் பலன்கள் அளிக்கப்படுகிறது.

இந்த இணையதளத்தின் வாயிலாக உங்கள் ஜாதகப்படி உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் மேலும் இந்திய ஜோதிட முறையிலும் மேற்கித்திய ஜோதிட முறையிலும் பலன்கள் உரைக்கப்படும். மேலும் திருமணப்பொருத்தம், எண்கணிதம், கைரேகை, வாஸ்து சாஸ்த்திரம் பார்க்கப்படும். மேலும் பிரஸ்ஸனம் மற்றும் டாரட் கார்டைப் பயன்படுத்தி பலன் உரைக்கப்படும். இத்துடன் அதிர்ஷ்டக் கற்கள் தேர்வு செய்து பரிந்துரைக்கப்படும். மேலும் ஜோதிடம் பயின்று ஜோதிடம் பார்க்கும் ஜோதிடர்களுக்கு உயர் கணிதமாக சார ஜோதிட அடிப்படையில் எளிய முறையில் எப்படி பலன் உரைப்பது என்பது பற்றி கற்றுத்தரப்படும். 

link :: MY WEBSITE LINK

No comments:

Post a Comment