Sunday 12 April 2015

உதாரண ஜாதகங்களுடன் ஜோதிட கேள்வி பதில்கள் 02

ஜாதகம் - 2
பெயர் தி.சிவரஞ்சினி, D/o. தினகரன்
பிறந்த தேதி : 25-11-1981
பிறந்த நேரம் : காலை மணி 9.41,
பிறந்த இடம் : சென்னை
வியாழன் குரு தசை இருப்பு : 11-06-15


கேள்வி
எனது மகளின் காதல் திருமண வாழ்வு எப்படி இருக்கும்? குழந்தைபாக்கியம் உண்டா? எப்பொழுது? சுயதொழில் தொடங்கலாமா? உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? இவள் ஜாதகபப்டி கணவர் சுயதொழில் தொடங்கலாமா?


பதில்
தனுசு லக்னம் விருச்சிக ராசி விசாக நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் புதல்விக்கு 7, அதிபதி புதன் 10ம் அதிபதியாகவும் வந்து அவர் 12ம் இடத்தில் அமர்வது சுமாரான பலன் ஆகும். 7க்குடையவர் 12ல் அமர்வது பிரிவு பிரச்சினை போராட்டங்களைக் குறிக்கும். அந்தப் புதன் 1,4க்குடைய குரு சாரம் பெற்று அந்தக் குரு 11-ல் அமர்வதால் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்வதற்கும் சேர்ந்து வாழ்வதற்கும் பாக்யம் உண்டு. எனவே உங்கள் மகளின் மணவாழ்க்கையை பற்றிய கவலையை விடவும். தற்பொழுது உங்கள் புதல்விக்கும் 7ம் அதிபதி புதன் திசையில் புதன் புத்தி 6.11.2014 வரை நடப்பில் உள்ளது. இக்காலங்களில் கணவன் மனைவி பிரிவு ஏற்படுவது போல் தோற்றம் இருக்குமேயன்றி பிரிவு ஏற்படாது.

உடல் ஆரோக்யத்தைப் பொறுத்தவரை மிக அதிக கவனம் தேவை. 12ம் இடம் வைத்தியச் செலவுகளையும் ஆஸ்பத்திரியைக் குறிக்கும். அடுத்துவரும் கேது புத்தியும் கேது 2ம் இடத்தில் இருந்தாலும் அவர் 9க்குடைய சூரியன் சாரம் பெற்று அந்தச் சூரியன் 12ல் அமர்வது உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுயதொழில் தொடங்க இது உகந்த காலமல்ல, சுமார் 4 ஆண்டு காலத்திற்கு சுயதொழில் தொடங்குவது சிறப்பானதல்ல. மகள் ஜாதகப்படி கணவருக்கு சுயதொழில் தொடங்க வாய்ப்பில்லை, அடிமைக்கு வேலைக்கு செல்வதற்கே அதிக வாய்ப்புகள் உண்டு, மீறி சுயதொழில் தொடங்கினால் லாபகரமாக இருக்காது. 6ம் இடம் அடிமைக்கு வேலைக்குச் செல்வதையும் 7ம் பாவம் என்பது சுயதொழிலையும் குறிக்கும். மனைவி ஜாதகப்படி கேது புத்தி முடிந்து சுக்ர புத்தியில் சுயதொழில் தொடங்கினாலும் லாபகரமாக இருக்காது.

No comments:

Post a Comment