உ
எல்லாக்கிழமைகளுக்குமான
நல்ல நேரங்கள்
இதில்
குறிப்பிட்டுள்ள நல்லநேரம், ராகுகாலம், எமகண்டம், குளிகை எல்லாமே பொதுவான இந்திய
நேரத்துக்கு I.S.Tக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால்
உண்மையில் ஒவ்வொரு ஊருக்கும் சூரிய உதயம் வித்தியாசப்படும். எனவே எந்த ஊரில்
அல்லது நாட்டில் இருந்து இந்த அட்டவணையைப் பார்க்கிறாமோ அந்தந்த ஊரின் அல்லது
நாட்டின் சூரிய உதயத்திற்குப் பின் உள்ள நேரத்தை கணக்கில் கொள்ள வேண்டும்.
உதாரணமாக
:
புதன்கிழமை
நல்லநேரம் காலை 6.00 மணி முதல் 7.30மணி வரையாகும். இது இந்தியப் பொது நேரம்
I.S.Tக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சூரிய
உதயமோ நாளுக்கு நாள் மாதத்திற்கு மாதம் ஊருக்கு ஊர் நாட்டிற்கு நாடு
வித்தியாசப்படும். 18.02.2015 காலையில் சென்னையில் சூரிய உதயம் காலை
மணி 6.31 ஆகும்.
இந்த புதன் கிழமை காலை 6.31 மணியிலிருந்து 1 மணி 30 நிமிடம் நல்ல நேரத்தை கூட்ட காலை நல்ல
நேரம் 8மணி
1 நிமிடம் வரை உள்ளது என்று கணக்கிடுவதே
சரியான நல்ல நேரமாகும். இதே நாள் திருநெல்வேலியில் சூரிய உதயம் காலை மணி 6.37
ஆகும். இதிலிருந்து 1மணி 30 நிமிடத்தை கூட்டவேண்டும். காலை
8 மணி 7 நிமிடம் வரை நல்ல நேரமாகும். இதே
மாதிரி தான் ராகுகாலம், எமகண்டம், குளிகை நேரங்களையும் கணக்கிடுதல் வேண்டும்.
அருமையான பதிவு
ReplyDeleteexcellent post
ReplyDeleteUseful post. keep more like this. Thank you for the sharing.
ReplyDeleteJothida Nilayam in Chennai
Best Astrologers in Chennai